Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் . பல்கலைக்கு வரும் சீன நாட்டு பேராசிரியர்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்கில் சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) காலை 10 மணி முதல் 12 மணி வரை இரு மணிநேரம் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

"சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் முழுமையான வறுமை ஒழிப்பு: இலங்கைக்கான பாடங்கள்" எனும் தலைப்பில் குறித்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.

சீனாவின் வளர்ச்சி அனுபவத்திலிருந்தும் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்திற்கான அவற்றின் பொருத்தத்திலிருந்தும் முக்கியமான நுண்ணறிவுகளை ஆராயும் சிந்தனையைத் தூண்டும் அமர்வில் அனைவரையும் பங்கேற்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவின் தலைநகரான பீஜீங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச பகுதி ஆய்வுகள் கற்கை நிறுவனத்தின் உதவி பேராசிரியராக ஹீ யான் செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments