வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில் இருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments