யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சையின் பின்னர் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் , பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவ தவறே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த 23ஆம் திகதி பித்தப்பையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் , பெண் மயக்கமான நிலையில் காணப்பட்டமையால் , மேலதிக சிகிச்சைக்காக 25ஆம் திகதி யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , 27ஆம் திகதியான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நல்லூர் பகுதியை சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சத்திர சிகிச்சையின் போது , மருத்துவ தவறு இடம்பெற்றமையே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
No comments