கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கண் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
யாழ். போதனா வைத்தியசாலை கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர்.மு.மலரவன் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
ஆங்கிலநெறி ஆசிரிய மாணவர் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆசிரிய மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்.
நிகழ்வின் முடிவில் கலாசாலை முகாமைத்துவ குழுவினரால் டாக்டர்.மு.மலரவன் கௌரவிக்கப்பட்டார்.
No comments