Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நொர்தேன் யுனியின் துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரத்தினம்


நொர்தேன் யுனியின் துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றுள்ளார்.

பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முதலாவது பெண் பீடாதிபதி (2000 - 2003) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முதல் பெண் உறுப்பினராகவும் பொறுப்புக்களை வகித்துள்ளார்.

பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்தின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தின் வெற்றிகரமான ஆரம்பமாகவும் புதுமையும் மாற்றமும் நிறைந்த கல்வி மேம்பாட்டின் ஆழமான அஸ்திவாரமாகவும் விளங்குகிறது.

மேலும் அவரது வருகை நிறுவனத்தின் கல்வி சார் அர்ப்பணிப்புக்கும் திறமைமிகு பட்டதாரிகளை உருவாக்குவதில் நொர்தேன் யுனியின் தன்னிகரற்ற ஈடுபாட்டுக்கும் எடுத்துக்காட்டாக அமையும் என நொர்தேன் யுனி சமூகம் தெரிவித்துள்ளது.

இன்றைய பதவியேற்பு நிகழ்வில் , நொர்தேன் யுனியின் நிறுவனர் பத்மநாதன் இந்திரன் , அவரது பாரியார் நடிகை ரம்பா , நொர்தேன் யுனியின் பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் , மாணவர்கள் , என பலரும் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்வினை தொடர்ந்து பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.




 

No comments