Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, July 12

Pages

Breaking News

ஆட்சியமைப்பதற்காக நரித்தமான அரசியலை செய்கின்றனர்


முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  உரையாற்றிய போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் யாருடனும் கூட்டு சேரவில்லை. எங்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு - அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியலை நடத்தும் நபர்களாக சிலர் மாறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் அணி தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய விமர்சனங்களை  முன்வைத்தவர்கள், அவர்களுடன் சேர்ந்து தமது அரசியலை முன்னெடுக்கும் கேவலமான நிலை உள்ளது.

இப்படியானவர்களே எமக்கு எதிராக போலியான பிரச்சாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.