Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். அருச்சுனா எம்.பிக்கு செருப்பு மாலை


யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , நேற்றைய தினம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறான நிலையில் , அருச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு , பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

No comments