மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இதுவரை காலமும் கடமையாற்றிய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலக அனுராதபுரம் கஹாட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இ.எஸ்.அபயசேகர மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
முன்னதாக மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் மானிப்பாய் பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதன்பின்னர் பொலிசாரால் பொலிஸ் மரியாதையுடன் வரவேற்கபட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார் .






No comments