ஓமந்தை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த து. சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா) என்பவரே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் , எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
அவருடன் காரில் பயணித்த மனைவி , மகன் மற்றும் மைத்துனர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபாகரனின் மகனான அக்ஷே கடந்த 1ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பிரபாகரனின் மைத்துனர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
No comments