Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். போதைப்பொருள்களுடன் 4 இளைஞர்கள் கைது


யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் , ஐஸ் , கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுன்னாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில். பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , ஒரு கிராம் ஐஸ் மற்றும் 50 கிராம் ஹெரோயின் ஆகிவற்றுடன் ஒருவரும் , 05 கிராம் கஞ்சாவுடன் ஒருவரும் , 04 போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை , சுன்னாக பொலிஸ் பிரிவில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட போதை வியாபாரியை , நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments