யாழ்ப்பாணம் , சுதுமலை அம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மூன்று பக்தர்களின் சுமார் 06 பவுண் தங்க சங்கிலி மறுக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை பவுண் சங்கிலிகள் இரண்டும் , மூன்று பவுண் சங்கிலி ஒன்றும் அறுக்கப்பட்டுள்ளதாக மூவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தேர்த்திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்த வேளை பக்தர்கள் மத்தியில் புகுந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments