Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மசாஜ் நிலையத்தில் இலவசமாக சேவையை பெற முயன்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்


மாத்தறை வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மாத்தறை, வல்கம பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்திற்குச் சென்று முகாமையாளருடன் கடுமையான வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் அவரது சேவைகளை இலவசமாகப் பெறவும் முயன்றுள்ளனர். 

இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடையமை கண்டறியப்பட்ட நிலையில், பொலிஸாரின் நன்னடத்தையை பாதிக்கும் வகையில் தனிப்பட்ட இலாபத்திற்காக பொலிஸ் பதவியைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான நடத்தையில் ஈடுபட்டு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக மேற்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 

இவர்களில் மாத்தறை வலய புலனாய்வு பிரிவில் பணியாற்றும் ஒருவரும் திஹகொட மற்றும் மாவரல பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் இரு அதிகாரிகளுமே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments