யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில் இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே குறித்த கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபவானந்தராசா , ஜெய்சந்திரமூர்த்தி ரஜீவன், க. இளங்குமரன் , சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அருச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா பல்வேறு விடயங்களுக்கு நக்கல் , நையாண்டி கலந்து பதிலளித்து கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
அதனை அடுத்து கூட்ட முடிவின் போது, யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டது குறைவு. தேவையற்ற விடயங்கள் பேசப்பட்டதே அதிகம். இப்படியான கூட்டம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் எனஅமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
No comments