டேவிட் பீரிஸ் குழுமத்தினால் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு ஒரு தொகுதி கணனிகள் உள்ளிட்டவை இன்றைய தினம் புதன்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
யுத்தம் காரணமாக 32 வருடங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்த்திருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே அப்பகுதி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். அந்நிலையில் பாடசாலை பல்வேறு பௌதிக வளங்கள் உள்ளிட்ட வளங்கள் அற்ற நிலையிலையே இயங்கி வருகின்றது.
இந்நிலையில் மாணவர்களுக்கான கற்கை நெறிகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு கல்லூரி அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக டேவிட் பிரிஸ் குழுமத்தினால் 08 கணனிகள், அவற்றுக்கு உரிய தளபாட வசதிகள் மற்றும் கணனி அறைக்கான குளிரூட்டிகள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் இந்நிகழ்வில் டேவிட் பிரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ரோஹன திசாநாயக்க , சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஜெயந்த ரத்நாயக்க, அசாட்லைன் பினாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அசாம் நிசங்க பாடசாலை அதிபர், ஆசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments