யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 50 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அந்நிலையில், செய்மதி படங்களின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என அடையாளப்படுத்தப்பபட்டுள்ளது.
குறித்த பகுதியிலும் மனித எலும்பு சிதிலங்கள் சிக்கலான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக அகழ்வு பணிகளின் பின்னரே அவை தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments