யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வீட்டில் இருந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 15 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments