அணையா விளக்கு போராட்டத்தின் கோரிக்கைகள் சாவகச்சேரி பிரதேச சபையில் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது!
சாவகச்சேரி பிரதேச சபையின் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற முதலாவது அமர்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த இராமநாதன் ஜோகேஸ்வரன் அவர்கள் செம்மணியில் 2025 ஜூன் 23 தொடக்கம் 2025 ஜூன் 25 வரை நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான ஜூன் 25 அன்று ஐநா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அவர்களுக்கு செப்பு பட்டயமாக வழங்கப்பட்டிருந்த,
1. செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் ஐ. நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக் கூறல் செயற்திட்ட அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீட்டை வழங்கவும் கண்காணிப்பில் ஈடுபடவும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
2. ஐ நா மனித உரிமை பேரவையின் 46/1 தீர்மானத்துக்கமைய இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு ஐ. நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக் கூறல் செயற்திட்ட அதிகாரிகளுக்கு தங்கு தடையற்ற அனுமதி இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும்.
3. மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தமது சமூகத்தின் வளங்களை பெற்று அதன் மூலம் சுதந்திரமான தொழிநுட்ப உள்ளீட்டைப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமாறு அழுத்தம் வழங்க வேண்டும்.
4. புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் கோரப்படும் அனைத்து நிதி கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும்.
5. இது வரை வெளிவந்த தகவல்கள் பிரகாரம் அனைத்து புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கண்காணிப்புடனான அகழ்வுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
6. இலங்கையில் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐ. நா பொதுச் சபை ஊடாக ஐ. நா பாதுகாப்பு அவைக்கு விடயம் பாரப்படுத்தப்பட்டு அதனூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றை சாத்தியப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஐ நா மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் ஐ. நா மனித உரிமை பேரவை கூட்டத்தில் முடுக்கி விட வேண்டும்.
ஆகிய ஆறு கோரிக்கைகளும் சவாவகச்சேரி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
No comments