செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினர் அப்பகுதியில் குடியிருந்ததை யாராலும் மறுதலிக்க முடியாது. எனவே செம்மணி மனிதப் புதை குழியை சர்வதேச நிபுணர்களை கொண்டு வந்து ஆய்வு செய்ய அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என கோரினார்.
No comments