மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தினை ஆணிக்கட்டைகளை வீசி பருத்தித்துறை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் , வல்லிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை மந்திகை சந்திக்கு அருகில் கடமையில் இருந்து பொலிஸார் வழிமறித்த போது, டிப்பர் சாரதி வாகனத்தினை நிறுத்தாது தொடர்ந்து பயணித்துள்ளார்.
அதனை அடுத்து டிப்பர் வாகனத்தினை துரத்தி சென்ற பொலிஸார் டிப்பர் வாகனத்தின் சில்லுக்கு ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர். அதனால் சில்லின் காற்று போனமையால் , வாகனத்தை தொடர்ந்து செலுத்த முடியாது , வாகனத்தினை வீதியில் கைவிட்டு சாரதி தப்பியோட முயன்ற போது , பொலிஸார் சாரதியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்த பொலிஸார் , காற்று போன சில்லுகளை சரி செய்து டிப்பர் வாகனத்தினையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
No comments