Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அரசியல் ஆயுதமாக கச்சதீவு விவகாரம்


கச்சதீவு விவகாரத்தை இந்தியத் தரப்பு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். 

தனியார் ஊடகமொன்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவித்ததாவது

கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது. எந்த வளமும் அற்ற அந்தத் தீவில் ஒரு தேவாலயம் உள்ளது. மீனவர்கள் தமது வலைகளை உலரவைப்பதற்கு அந்தத் தீவைப் பயன்படுத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளைதான் கச்சதீவு விவகாரம் இந்தியாவில் பேசுபொருளாக மாறும். அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே அது தொடர்பில் பேசப்படுகின்றது. 

இந்தியாவில் இருந்து நாளொன்றுக்கு 800 முதல் 900 வரையான இழுவைப் படகுகள் வருகின்றன. இதன்மூலம் எமது கடல்வளம் நாசமாகி வருகின்றது. பெரும் பொருளாதார இழப்பும் ஏற்படுகின்றது. எனவே, அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். 

No comments