காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமண தரகரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமண தரகர், ஒரு பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி திருமணம் முடித்துவைத்துள்ளார்.
இந்த நிலையில் திருமானவர்களின் வீட்டிற்குள் சென்று வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பெறித்துவிட்டு சென்றுள்ளார்.
திருமண தரகரின் இந்த செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில், குறித்த திருமண தரகர் சம்பவ தினமான வியாழக்கிழமை பகல் பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்டதாக பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து 40 வயதுடைய திருமண தரகரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் நேற்று (25) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments