ஹட்டன் நகரின் கிளை வீதியில் உள்ள காலணி வர்த்தகம் நிலையம் ஒன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வர்த்தகம் நிலையம் மூடப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments