வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை உயிரிழந்துள்ளது.
பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் யானைகள் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர்.
மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments