யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய எடுத்து சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்து 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
சுன்னாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் எடுத்து செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட வேளை இளைஞனின் உடைமையில் இருந்து , 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்து , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments