நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.
நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை தங்கரத உற்சவமும் , நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மாம்பழ திருவிழாவும், அன்றைய தினம் மாலை ஒரு முக திருவிழாவும் , நாளை மறுநாள் புதன்கிழமை மாலை சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
No comments