Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு


2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைநாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது. 

இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை  ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. 

இதன்போது கருத்து வௌியிட்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், 

பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எனினும், அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும். மாணவர்கள் காலை 9 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும். 

இரண்டாம் பகுதி வினாத்தாள் முதலில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி 10.45 மணிக்கு நிறைவடையும். 

அதன் பிறகு அரை மணி நேரம் இடைவேளை வழங்கப்படும். 

முதலாம் பகுதி வினாத்தாள் காலை 11.15 மணிக்கு வழங்கப்படும். இந்த வினாத்தாள் ஒரு மணி நேரம் கொண்டதாகும். குறித்த வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு நிறைவடையும். 

பரீட்சை இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு அளிக்கலாம். இதற்காக விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது என்றார் 

No comments