பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நடிகை தமன்னா நடிக்கும் விளம்பர படப்பிடிப்புக்கள் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.
விளம்பர படப்பிடிப்புக்காக பல நாட்கள் நடிகை தமன்னா இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் இன்னிசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நடிகை தமன்னா ஏற்கனவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
குறித்த நிகழ்ச்சியில் தமன்னாவைப் பார்ப்பதற்காகவே ரசிகர் பட்டாளம் அலைமோதி சென்றிருந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் நடிகை தமன்னா இலங்கையை வந்தடைந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments