பணம் எடுத்து தந்து உதவுமாறு வயோதிப பெண் கொடுத்த ATM கார்ட்டுடன் தப்பியோட முயன்ற இளைஞன் மடக்கி பிடித்து , பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
தலவாக்கலை நகரில் உள்ள வங்கி ATM ஒன்றில் மருத்துவ செலவுக்காக பணம் எடுக்க வந்த வயோதிப பெண், அருகில் இருந்த இளைஞனிடம் பணம் எடுத்து தந்து உதவுமாறு கோரியுள்ளார். உதவுவதாக கூறி அட்டையை வாங்கிய இளைஞன் , அட்டையுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments