Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காணி வரைபடங்களை இணையத்தளத்தில் பெறலாம்


காணி வரைபடங்களை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு விழா நிகழ்வின் போது, நில அளவையாளர் நாயகம் வை.ஜி.ஞானதிலக நேற்றைய தினம் இதனை தெரிவித்தார். 

இந்த புதிய அமைப்பின் ஊடாக, பொதுமக்கள், திணைக்களத்தின் இணையத்தளம் வழியாக இணையவழி கட்டணம் செலுத்துவதன் மூலம் காணி அளவீட்டு வரைபடங்களை பெறமுடியும்.

சுமார் 2.4 மில்லியன் நில அளவை வரைபடங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. 

எனவே, காணி உரிமைச் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் நில அளவை வரைபடங்களும் வழங்கப்படும் எனவும் இது காணி தகவல் சேவைகளை நெறிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments