இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில் குரங்கு மோதியதால் 2025 பெப்ரவரி 09 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை தொடர்பாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணையை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்தியது.
கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இந்த விசாரணையில், இலங்கை மின்சார சபையின் பதில் பொது மேலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் வாக்குமூலங்களை வழங்கினர்.
பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக, 2025 பெப்ரவரி 09 ஆம் திகதி நாடு முழுவதும் திடீரென மின் தடை ஏற்பட்டது.
அப்போது, எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி, மின்மாற்றி அமைப்பில் குரங்கு மோதியதால் மின் தடை ஏற்பட்டதாகக் கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் அறிக்கைகளில் திருப்தியடையாததால், பொது பயன்பாட்டு ஆணைக்குழு மறு விசாரணை நடத்த முடிவு செய்தது.
அதன்படி, இந்த பகிரங்க விசாரணை இன்றைய தினம் நடைபெற்றது.
No comments