யாழில் கடற்தொழிலுக்கு கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளார்.
மயிலிட்டி பகுதியை சேர்ந்த அரியக்குட்டி ஹரிஹரன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மயிலிட்டி பகுதியில் இருந்து குறித்த முதியவரும் , அவரது சகலனும் (மனைவியின் சகோதரியின் கணவர்) கடற்தொழிலுக்காக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு படகொன்றில் கடலுக்கு சென்றுள்ளனர்.
கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை , தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய முதியவர் சில நிமிடத்திலேயே படகில் , மயங்கி சரிந்துள்ளார்.
அதனை அடுத்து அவரின் சகலன் படகினை கரையை நோக்கி செலுத்தி , முதியவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments