ஊர்காவற்துறை பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றினை தவிசாளர் தலைமையிலான உறுப்பினர்கள் ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.
வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகனை, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் திங்கட் கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் முடிவில் பிரதேச அபிவிருத்தி உள்ளிட்ட பிரதேசத்திற்கான தேவைப்பாடுகள் உள்ளடக்கிய மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
No comments