யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கந்தையா ஜெயரத்தினம் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி அராலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் , வீதியின் மறுபக்கத்தில் இருந்த ஒழுங்கைக்குள் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments