Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறைக்குள் சயனைட் குப்பி


அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகளால் சயனைட் (Cyanide) குப்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் உதவியாளர் தரிந்து மதுசங்க என்பவரிடம் இருந்து குறித்த சயனைட் குப்பி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

கொமாண்டோ கவிஷ்க குமாரவைக் கொலை செய்வதற்காக, இந்த சயனைட் குப்பி சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதற்கமைய, சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்பட்ட சயனைட் குப்பியைப் பரிசோதிப்பதற்காக, அதனைச் சிறைக்குள் கொண்டுவந்த குழுவினர், பல்லி ஒன்றுக்கு ஊசி மூலம் செலுத்தியுள்ளதாகவும், இதன்போது அந்தப் பல்லி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments