35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் யாழ் மாவட்ட ரீதியிலான பெண்களுக்கு இடையிலான துடுப்பாட்ட போட்டியில் தெல்லிப்பழை பிரதேச அணி சம்பியனாகியுள்ளது.
நெல்லியடி கொலின்ஸ் மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதிச்சுற்றில் தெல்லிப்பழை பிரதேச அணி , கரவெட்டி அணியினை எதிர் கொண்டது
போட்டியில் கரவெட்டி அணியினை 28 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் , 29 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தெல்லிப்பழை பிரதேச அணி 2.3 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் ஆட்டமிழப்பு எதுவும் இன்றி வெற்றி பெற்று , சம்பியனானது.
No comments