முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் இடமாற்றங்கள் மேற்கொண்டமை, ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் ஆசிரியர்களை இடமாற்றங்கள் மேற்கொண்டமை, அதிபரை ஒரு மாதகாலமாக நியமித்து தராமல் இழுத்தடிப்பு செய்து அதிபர் நேர்முக பரீட்சையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக ஆசிரியர் ஒருவரை குமுழமுனை மாகாவித்தியாலய பாடசாலைக்கு அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்திற்கான மனுவினை ஆளுநர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டசெயலர் முல்லைத்தீவு, வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதுடன் ஆளுநருக்குரிய மனுவினையும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான மனுவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் போராட்ட களத்தில் வைத்து கையளிக்கப்பட்டிருந்தது.
No comments