யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்பவும் , யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கும் தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மண்டைதீவு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் படகு சவாரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்திருந்தனர்.
நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது,
யாழ். மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதன் ஓர் அங்கமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும் எமது இலக்காகும்.
இதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், தனியார் துறையினரும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் யாழ். படகு சவாரி திட்டம் மண்டைதீவு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டங்கள் எமது யாழ். மண்ணுக்கு சுற்றுலாப் பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கு இது உதவும் என நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.
No comments