மட்டக்களப்பு, மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20ஆயிரம் ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை திருடிய 39 வயது பெண்ணை வெல்லாவெளி பொலிஸார் கைது செய்தனர்.
ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் வேளையில், ஆலயத்தில் தரிசனத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரின் கைப்பை திருடப்பட்டது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயப் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து திருடப்பட்ட பணப்பையும், அதிலிருந்த 20,000 ரூபாவும் மீட்கப்பட்டன. மேலும், அவரிடமிருந்து கூடுதலாக 65,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







No comments