எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் 15 ஆவது மைல்கல்லுக்கு அருகில், பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவை தாண்டியும் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பேருந்து சுமார் 300 - 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாகவும், பேருந்தில், தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பயணித்ததாக கூறப்படுகின்றது.
விபத்தின்போது பஸ்ஸில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இராணுவம் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக பண்டாரவளை மற்றும் எல்ல பொலிசார் தீவிர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் விபத்து நடந்த இடத்திற்கு பார்வையிட வர வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்






No comments