வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சிறுவர் பூங்கா உரிய பராமரிப்புக்கள் இன்றி காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை கடற்கரை ஓரம் அமைந்துள்ள குறித்த சிறுவர் பூங்கா பிரதேச சபையின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் உள்ளது
சிறுவர் பூங்காவின் நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு 20 ரூபாயும் , பெரியவர்களுக்கு 30 ரூபாயும் பிரதேச சபையினால் அறவிடப்படும் நிலையில் , பூங்கா பராமரிப்பின்றி பற்றைக்காடுகளாக காணப்படுவதாகவும் ,அங்குள்ள சிறுவர்கள் விளையாடும் சறுக்கீஸ் , ஊஞ்சல் போன்றவை பராமரிப்பின்றி காணப்படுகிறது.
நுழைவு கட்டணம் செலுத்தி பூங்காவினுள் சென்று , அங்கு பொழுதை கழிக்க முடியாத நிலையும் சிறுவர்கள் விளையாட முடியாத நிலைமையும் காணப்படுகிறது.
இது தொடர்பில் பிரதேச சபையினர் கவனம் செலுத்தி , பூங்காவை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் எனவும் , காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்





No comments