போதைப்பொருளை எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை ஈழமக்கள் ஜனநாயக கட்சி வரவேற்பதுடன், போதையற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே எமதும் நிலைப்பாடு என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
போதையற்ற தேசமாக இந்நாடு உருவாக்கப்பட வேண்டும், போதை கடத்தலில் விற்பனையில் ஈடுபடுபவர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு.
இதை கடந்த காலங்களில் இருந்த அரசுகள் முன்னெடுத்து வந்தபோதும் இன்றைய அரசு சற்று வேகத்துடன் முன்னெடுத்து வருகின்றது.
இதனால் பல முக்கிய புள்ளிகள் கைதாகியும் அதிகளவிலான போதைப்பொருட்கள் பிடிபட்டும் வருகின்றன.அதவகையில் அரசின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.
குறித்த செயற்பாட்டை அரசு தொடர்ந்து முன்னெடுத்து நாட்டில் போதையை இல்லாதொழிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
No comments