தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கா் (வயது 46) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலமானாா்.
சின்ன திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கா், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கா், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தாா்.
சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் ரோபோ சங்கா் திடீரென மயக்கமடைந்தாா்.
அவருக்கு நீா்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவா் சென்னை பெருங்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தாா்.
No comments