Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வேர்முகங்கள் நூல் வெளியீடு


கலை, இலக்கியப் பேராளுமைகளுடன் சுழலியலாளர் பொ.ஐங்கரநேசன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பு "வேர் முகங்கள்" என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த நிகழ்வு நடைபெற்றது.

யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை தலைவர் கலாநிதி தி.செல்வமனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரவேற்புரையை கலை, இலக்கியச் செயற்பாட்டாளர் கை.சரவணனும் கருத்துரைகளை ஊடகவியலாளர் சர்மிலா வினோதினி மற்றும் சமூக ஆய்வாளர் தெ.மதுசூதனன் ஆகியோரும் வெளியீட்டுரையை எங்கட புத்தகங்கள் பணிப்பாளர் கு.வசீகரனும் வழங்கினர்.

அதனை தொடர்ந்து நூல் வெளியீட்டு வைக்கப்பட்ட வேளை யாழ். ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் உள்ளிட்ட விருந்தினர்கள் நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நூலாசிரியர் பொ.ஐங்கரநேசன் இறுதியில் உரையாற்றினார்.








No comments