யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் 180 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் 18. 22 மற்றும் 24 வயதுடைய நபர்கள் எனவும் , அவர்கள் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்த பொலிஸார் , மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments