நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமான படையின் விமானங்கள் மூலம் தாக்கிய குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவ மாணவிகளின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
கடந்த 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ம் திகதி, நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டு வீச்சு தாக்குதலில் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 21 மாணவ மாணவிகள் படுகொலையானார்கள். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளானார்கள்.
அன்றைய தினம் படுகொலையான மாணவர்களின் நினைவாக பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக சுடரேற்றி , மலர் மாலை அணிவித்து , மலரஞ்சலி செலுத்துத்தப்பட்டது.
நிகழ்வில் படுகொலையான மாணவர்களின் பெற்றோர்கள் , நண்பர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
No comments