பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகை திட்டத்தின் ஆரம்பமும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் தலைமையில் கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபையில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ச.பவானந்தராஜா, பனை அபிவிருத்தி சபை தலைவர் ஆர்.ரவீந்திரன், பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள், பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments