ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது.
குறித்த வாழ்த்து செய்தியில்,
ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றது. தீமையை வீழ்த்தி நன்மை வெற்றிபெறும் நினைவூட்டலாகவும், அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும் சமூகத்தை உருவாக்கும் ஊக்கமாகவும் இந்தப் பண்டிகை விளங்குகிறது.
நம் மனத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் இருளை – அறியாமை – பொறாமை - தீமை அகற்றி ஒளியை அறிவு - அன்பு - நம்பிக்கை - பரப்பும் திருநாளாகும். இந்த இனிய நாளில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும்.
வடக்கு மாகாண மக்களுக்கு நான் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நாளின் ஒளி அனைவரின் இதயங்களிலும் நல்வாழ்வையும் செழிப்பையும் நிரப்பட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments