யாழ் போதனா வைத்தியசாலை விடுதி இலக்கம் 11-ல் சிறுவர் தினம் நேற்று முன்தினம் புதன்கிழமை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.
நோய்வாய்ப்பட்ட நிலையிலும், சிறுவர்கள் உற்சாகமாக விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிறுவர்கள் தான் எதிர்கால சமுதாயதை தீர்மானிப்பார்கள. அவர்களின் இளமைக் காலத்தில் வலுவானவர்களாக வளர்ச்சி பெற ஏற்ற வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். உடல் உள ரீதியாக பாதிப்படையாமல் பாதுகாத்தல் அவசியம் என நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.







No comments