தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரமே தமது கட்சி உறுப்பினர்களுக்கு மாதாந்தம் இரண்டு அரசியல் வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர். அதன் மூலம் கட்சியில் பெண்களை மதிக்கும் விதமும் அவர்களுக்கான வெளியை அவர்களுக்கு உணர வைக்கும் என வைதேகி நரேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாக பதவியேற்றிருக்கும் 35 வயதுக்குட்பட்ட பெண் உறுப்பினர்களுக்கான "தந்திரோபாய தலைமைத்துவ இயல்பை வளர்த்துக்கொள்ளுதல்" என்ற தலைப்பில் வவுனியாவில் நடைபெற்ற பயிற்சியில் வளவாளராக பங்கு பற்றி இருந்த வேளையே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் முதல்தடவையாக தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள்.
இன்னும் மூன்றரை வருடகாலம் சபை உறுப்பினர்களாக இருக்கப்போகும் அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள இருக்கின்றது.
அரசியல், சட்டம், பொருளாதாரம், சூழலியல் மட்டுமல்லாது உளவியலும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். "இதை தான் நீங்கள் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை" என்ற சந்தர்ப்பங்களை அவர்கள் கையாள வேண்டும்,
எல்லாவற்றுக்கும் எதிர்வினை காட்டாமல் இருக்க பழக வேண்டும், எதிர்வினை காட்ட வேண்டிய இடங்களில் எதிர்வினை காட்ட வேண்டும்,
முக்கியமாக சபை நாகரீகமும் வார்த்தை பிரயோகங்களும் அவர்களின் ஆளுமையை எப்படி மக்களிடையே பிரதிபலிக்கும் என தெரிவித்தார்.
அதன் போது பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் போது,
பதவியேற்று கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகி இருந்த போதிலும் அதற்கிடையில் நெருக்கீடுகளை கேலிகளை வசவுகளை எமது மது சொந்த கட்சிகளிலேயே எதிர்கொள்வதாக சில உறுப்பினர்கள் கூறினார்கள்
அதற்கு "பொறுமையாக உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். நிறைய வாசியுங்கள். கட்சி பேதமின்றி பழைய உறுப்பினர்களிடம் முன்னைய காலங்களில் நடந்தவற்றை கேட்டறியுங்கள். மனிதர்களை கையாளப் பழகுங்களை அதற்கு முதல் உங்கள் உணர்வுகளை கையாளப்பழகுங்கள்".
அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என வளவாளர் தெரிவித்தார்.
மேலும் அத்தனை கட்சிகளுக்குள்ளும் தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரமே தமது உறுப்பினர்களுக்கு மாதம் இரண்டு தடவை முழு நாள் அரசியல் வகுப்பு நடத்துகின்றது.
"அரசியல் வகுப்பு" என்பது எனக்கு தெரிந்து ஓர் இயக்க நடைமுறை. அது தனது உறுப்பினர்களை அரசியல் வலுப்படுத்துகின்றது. அது அவர்களை இன்னும் பலப்படுத்தும்.
அதுமட்டுமல்லாது பெண்களை அந்த கட்சி மதிக்கும் விதமும் அவர்களுக்கான வெளியை அவர்களுக்கு உணர வைக்கும் என வளவாளர் மேலும் தெரிவித்தார்.
No comments