சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சீனாவுக்கு சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
"ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை" என்ற கருப்பொருளின் கீழ் பீஜிங்கில் பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
சீன அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பும் கூட்டாக இணைந்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் அமரசூரிய ஒரு முக்கிய உரையை நிகழ்த்துவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பல உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments